தடுப்பூசிக்கு மக்கள் அச்சப்படவேண்டாம் - ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:00 IST)
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சப்படவேண்டாம் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார் . 

 
சென்னை  அரசு  ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனை இன்று லால் பாத்லேப் என்ற அறக்கட்டளை மற்றும் ஆர் எம் டி சேர்ந்து சுமார் 18 லட்சம் மதிப்பிலான கொரோன நோய்த்தடுப்பு  உயிர் காக்கும் அதி தீவிர உபகரணங்கள் அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் அவரிடம்  வழங்கப்பட்டது. 
 
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் திரு தெரணிராஜன்  பேசுகையில்  கொரோன நோய் தொற்று மீண்டும் பரவிவருகிறது என்பதால்  பொதுமக்கள்  அனைவரும் தடுப்பூசி  கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் .  
 
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவு ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம் என்றும் கூறினார். இதுவரை 250 கொரோன நோயாளிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் தேரணிராஜன். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்