விவேக் விட்டு சென்ற பணியை நாங்கள் தொடர்வோம்! – திமுக சுற்றுசூழல் அணி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:08 IST)
சமீபத்தில் உடல்நல குறைவால் இறந்த நடிகர் விட்டு சென்ற மரம் நடும் பணியை தொடர உள்ளதாக திமுக சுற்றுசூழல் அணி அறிவித்துள்ளது.

திரைப்பட காமெடி நடிகரும், சுற்றுசூழல் ஆர்வலருமான விவேக் சில தினங்கள் முன்னதாக உடல்நல குறைவால் காலமானார். அப்துல்கலாம் தூண்டுதலால் நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர் விவேக். அவர் மறையும் முன்னதாக தமிழகம் முழுவதும் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது கனவை நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர்கள் பலரும் தமது வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிலையில் விவேக்கின் கனவான ஒரு கோடி மரக்கன்று நட்டு வளர்த்தல் என்ற முயற்சியை திமுக கையில் எடுத்து அவர் விட்டு சென்ற மகத்தான பணியை நிறைவேற்றுவதாக திமுக சுற்றுசூழல் அணி தலைவர் கார்த்திகேயெ சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்