சபாநாயகருக்கு பதிலாக முதல்வரை நீக்க வேண்டும்: திமுகவின் திடீர் மாற்றம்

செவ்வாய், 25 ஜூன் 2019 (08:38 IST)
சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் வரும் ஜூலை 1ஆம் தேதி எடுத்து கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தீர்மானத்தில் இருந்து திமுக பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி அடைய திமுகவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் போதுமான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இல்லை. தினகரன் ஆதரவாளர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களும் தாங்கள் இரட்டை இலை எந்த பக்கம் இருக்கின்றதோ, அவர்களுக்குத்தான் ஆதரவு என்று தெளிவுற கூறிவிட்டனர். அவர்களுடைய கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தானாகவே தோல்வி அடைந்துவிடும்
 
இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் தற்போதைக்கு சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி பெறுவதைவிட முதல்வரையும் அவருடைய ஆட்சியையும் நீக்குவதில்தான் திமுக தீவிரமாக இருப்பதாகவும், சபாநாயகர் மீதான தீர்மானம் தங்களுக்கு இரண்டாம் பட்சமே என்றும் கூறியுள்ளார். இதில் இருந்து திமுகவே சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்