அதிமுக கொடிக்கம்பத்தால் காலை இழந்த பெண்ணுக்கு திமுக நிதியுதவி

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (17:57 IST)
கோவையை சேர்ந்த அனுராதா என்ற இளம்பெண் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கீழே சாய்ந்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவருடைய இரண்டு கால்கள் மீறியதால் அவர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 
 
அனுராதாவின் கால்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அனுராதாவின் ஒருகால் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து தங்களுடைய மகளின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என அனுராதாவின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
இந்த நிலையில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட அனுராதா என்ற பெண்ணுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அனுராதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து இந்த பணத்தை அவர் கொடுத்து அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முகஸ்டாலின் கூறியதாவது: ‘தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியாது என்று எப்படி முதல்வர் சொன்னாரோ? அதேபோன்று அனுராதா விபத்தில் சிக்கிய சம்பவமும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியது வேடிக்கையாக உள்ளது. வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது. 
 
அனுராதா விபத்தில் சிக்கியது தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். கொடி கட்டியவர்கள், விழா நடத்தியவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தி.மு.க துணை நிற்கும்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்