தனபால் புதிய முதல்வர்: திவாகரனின் பலே பிளான் இது தான்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:54 IST)
தமிழக அரசியலில் பரபரப்பான கட்டங்கள் அரங்கேறி வருகின்றன. ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.


 
 
இன்று காலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். சட்டமன்றத்தை கூட்டி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய சட்டத்தில் இடமுள்ளது என கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதனையடுத்து புதிய முதல்வராக சபாநாயகர் தனபாலை கொண்டு வந்தால் மட்டுமே ஆதரவு கொடுக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேட்டியளிக்க திவாகரன் வலியுறுத்தியுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
சபாநாயகர் தனபால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் எம்எல்ஏக்கள் 28 பேருடைய ஆதரவு தனபால் முதல்வராக கிடைக்கும் என திவாகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலித் எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் ஆட்சியை தொடர முடியாது.
 
தலித் எம்எல்ஏக்களின் ஆதரவை தங்கள் பக்கம் இழுக்க தனபாலை தற்போது முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது தினகரன் தரப்பு. இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே தலித் சமுதாய எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது கையிலெடுத்துள்ளார் திவாகரன்.
அடுத்த கட்டுரையில்