சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மரணம் தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து இந்த மரணம் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலையே என்பதை உணர்த்தும் விதமாக சினிமா இயக்குனர் ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.
விஜயின் சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் தான் அந்த மீம்ஸை பகிர்ந்தது. இது மற்றவர்களால் பின்னர் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. இதனால் அவர் தான் ஷேர் செய்த அந்த மீம்ஸை ஒரு மணி நேரத்தில் நீக்கி விட்டார்.