சிறையில் சசிகலாவோடு வாக்குவாதம் செய்த தினகரன்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (12:00 IST)
ஜாமீனில் வெளியே வந்தபின்னர் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் நேற்று இரண்டாவது முறையாக அவரை சிறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சசிகலாவிடம் தினகரன் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது.


 
 
நேற்று தனது ஆதரவாளர் புகழாந்தி மற்றும் இளவரசியின் மகன் விவேக்குடன் பெங்களூர் சிறைக்கு சென்றார் தினகரன். அப்போது அவர் சசிகலாவிடம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் என யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை. இப்படியே போயிட்டு இருந்தால் கட்சி என்ன ஆகும்னு தெரியல.
 
35 எம்எல்ஏக்கள் நம்ம பக்கம் இருக்காங்க, மேலும் 24 எம்எல்ஏக்கள் வரத்தயாரா இருக்காங்க. கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்கள் நம்மக்கிட்ட இருக்காங்க இப்ப. நீங்க சொன்னதாலதான் நான் எதுவும் பேசாமல் அமைதியா இருக்கேன் என கூறியிருக்கிறார் தினகரன்.
 
அதற்கு சசிகலா 60 எம்எல்ஏக்கள் நம்ம பக்கம் வந்தது நல்ல விஷயம்தான். அவர்கள வச்சு ஆட்சிய கலைக்க முடியும் ஆனா மறுபடியும் தேர்தல் வந்தா நாம 10 இடத்துல கூட ஜெயிக்க முடியாது. அப்புறம் 5 வருஷத்துக்கு நாம எதுவும் பண்ண முடியாது என்றார்.
 
அதுக்காக இப்படியே எத்தனை நாளுக்கு இருக்க முடியும். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அப்படியே போகச் சொல்றீங்களா? நாம எதும் பண்ணாமல் இருந்தால் நம்மக்கிட்ட இப்ப இருக்கவங்களும் அவங்க பக்கம் போயிடுவாங்க என வாக்குவாதம் செய்துள்ளார் தினகரன்.
 
ஆனால் சசிகலா உறுதியாக, நீ என்ன கேட்டாலும், இந்த ஆட்சிக்கு நம்மால எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான் என்னோட கருத்து. அதுல எப்பவும் மாற்றம் இல்ல என தினகரனை அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா.
அடுத்த கட்டுரையில்