தர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பள்ளியில் காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது
பல்லி இறந்தது கண்டுபிக்கப்படுவதற்குள் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதால், அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த தகவல், பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும், உணவு சமைத்தவர்கள் மேற்பார்வையாளர்கள் ஆகியவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.