தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் திடீரென மூடல்.. என்ன காரணம்?

Mahendran

திங்கள், 22 ஜூலை 2024 (10:41 IST)
தமிழகத்தில் ஒன்பது பொறியியல் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதி இல்லாதது ஆகிய காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஒன்பது பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டதாக தகவல் வழியாக உள்ளன. தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பு படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்பதும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற காரணமே பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றும் கூறப்பட்டது.

மேலும் ஏஐ டெக்னாலஜி உள்பட புதிய படிப்புகள் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் அது போன்ற படிப்புகளில் சேர மட்டுமே மாணவர்கள் விரும்புவதால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை விளம்பரப்படுத்தி கூப்பிட்டு சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் போதுமான மாணவர்கள் இல்லாததால் ஒன்பது பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டதாகவும் இன்னும் சில கல்லூரிகளில் குறைவான மாணவர்கள் மட்டுமே இருப்பதால் எதிர்காலத்தில் அந்த கல்லூரிகளும் மூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்