தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. இன்று துணை முதல்வர் அறிவிப்பு வருமா?

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (14:29 IST)
தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாகவும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சற்றுமுன் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு பெற்ற நிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் துணை முதல்வர் அறிவிப்பு வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
 
ஆனால் ஆளுநர் சென்னையில் இல்லை என்பதால் இன்று அறிவிப்பு வெளியானாலும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு இருக்க வாய்ப்பில்லை. மேலும்  முதல்வர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். செப்.21ஆம் தேதி பிரதமர் வெளிநாடு செல்லும் நிலையில் அதற்குள் சந்திப்பு நடக்கவில்லை என்றால் முதல்வர் - பிரதமர் சந்திப்புக்கு இன்னும் நாளாகும். என்றால் நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்கள்தான் உள்ளது.
 
மேலும் டி துணை முதல்வர் அறிவிப்பு, இலாகா ஒதுக்கீடு என்றால் ஆளுநர் மாளிகையிலிருந்து ஒப்புதல் அறிவிப்பு வரும். அதுவும் இன்றிரவு தான் ஆளுநர் சென்னை திரும்புகிறார் அதனால் இன்று வர வாய்ப்பில்லை. மேலும் மிக முக்கியமாக  இன்று வராது இன்று நல்ல நாள் இல்லை என்றும், ஆகவே எந்த அறிவிப்பும் இன்று வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்