தினகரனை ஆதாரம் கொடுக்க சொல்லுங்கள் - தீபா விளாசல் (வீடியோ)

செவ்வாய், 10 ஜூலை 2018 (10:53 IST)
அ.தி.மு.க-வின் தொண்டர்கள் 90 சதவீதம் டிடிவி.தினகரனிடம் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் கொடுக்க சொல்லுங்கள் என ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார்.

 
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கரூர் வந்தார். அப்போது., முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா“ தற்போதைய தமிழகத்தின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இது மக்களுக்கு எதிரான ஆட்சி, மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சிக்கு கீழ் இயங்கும் ஆட்சி தான் தமிழகத்தினை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க என்று ஒரு கட்சி தான் உள்ளது. இதில் அணிகள் கிடையாது என தெரிவித்தார்.
 
மேலும், டி.டி.வி தினகரன் ஆரம்பித்துள்ளது ஒரு இயக்கம் தான், அது அ.தி.மு.க கிடையாது எனக்கூறிய அவர் டி.டி.வி தினகரனிற்கு கீழ் 90 விழுக்காடு அ.தி.மு.க வினர் உள்ளனர் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அதற்கு ஆதாரம் கொடுக்க சொல்லுங்கள், டிடிவி தினகரன் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது, மேலும் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை, ஆகவே, தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க முடிவுகள் ஏதும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு அல்ல என அவர் தெரிவித்தார்.
 
பேட்டி : ஜெ.தீபா – பொதுச்செயலாளர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை
-சி.ஆனந்த்குமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்