தஞ்சை பெரிய கோயிலில் லண்டன் வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!

J.Durai
திங்கள், 29 ஜூலை 2024 (09:41 IST)
லண்டன் வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
 
இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சியை இந்த குழுவினர் நடத்த உள்ளனர். 
 
இதற்காக லண்டனிலிருந்து 52 பரதநாட்டிய நடன மாணவர்களை  அழைத்து வந்துள்ளனர். 
 
இந்த 52 பேரும் லண்டன் மற்றும் அதன் அருகே உள்ள மாகாணங்களை சேர்ந்த பூர்வீக தமிழர்கள் ஆவார்கள். இவர்களின் மூலம் தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்துவது மட்டுமின்றி, பரதநாட்டிய கலையை மற்ற லண்டன் வாழ் தமிழர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என நிருத்திய சங்கீத அகாடமியை சேர்ந்த ராதிகா தெரிவித்தார். 
 
இது தொடர்பாக சென்னை மதுரவாயலில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா கூறியதாவது......
 
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம் என பலர் தெரிவித்தனர். ஆனால் முறைப்படி நான் தமிழக அரசை அனுகிய போது  அதிகாரிகள் எனக்கு  உரிய வகையில் இதற்கு அனுமதி அளித்தனர் என்று தெரிவித்தார்.
 
எங்கள் குழுவினர் ஐரோப்பா ஜெர்மனி உக்ரைன் ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளது இருந்தாலும் தமிழகத்தில் உள்ள  சிதம்பரம் கோவிலில் தாங்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியே மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
அதுமட்டுமின்றி தங்கள் குழுவினரின் 20 ஆம் ஆண்டு நடத்தப் போகும் தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெய்வங்களுக்கு தங்களது நடனத்தையும்,இசையையும் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்