ராம்குமாரை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (10:18 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு. 3 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


 
 
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், விசாரணைக்காக மூன்று நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். இன்றுடன் போலீஸ் காவல் முடிவடைகிறது. பின்னர் மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
 
சுவாதி கொலை வழக்கை மக்கள் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வுகளையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புழல் சிறையில் இருந்து போலீஸ் காவலில் விடப்பட்ட ராம்குமார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதை அறிந்த பொது மக்கள் ராம்குமாரை பார்க்க ஆர்வமாக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே குவிந்தனர்.
 
இந்த வழக்கு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் முக்கியத்துவத்துக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்