கொரோனா நிவாரணத்துக்கு நிதி கொடுக்க கொடுக்க முன்வந்த அறநிலையத்துறை! நீதிமன்றம் தடை!

Webdunia
திங்கள், 4 மே 2020 (15:29 IST)
நாடு முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு அறநிலையத்துறை அறிவித்த தொகையைக் கொடுக்கவிடாமல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்களும், நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் அளிக்க இருப்பதாக அறநிலையத்துறை ஆணையர் அறிவித்தார்.

ஆனால் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘இந்து அறநிலையத்துறை ஆணையர் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி கோவில்கள் பணமாற்றம் செய்ய உத்தரவிட்டது அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. டிரஸ்டிக்கள் இல்லாத சூழ்நிலையில் ஆணையர் உத்தரவு செல்லாது.எனவே உத்தரவை வாபஸ் பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க ஆணையருக்குஉயர் நீதிமன்றம் உத்தரவு.’ என தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்