ஈரோடு மாவட்டத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டவுடன் உடனடியாக அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தது. அதுமட்டுமின்றி ஈரோடு எல்லைகளையும் மூடியது.
முதல் கொரோனா நோயாளியுடன் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல் வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்த வேலை அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தியதான்.
ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருந்த நிலையில் அரசும் மாவட்ட நிர்வாகமும் சீரிய நடவடிக்கை எடுத்தபோதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை. குறிப்பாக வடசென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார் பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் வசிக்கும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கண்டுகொள்ளவே இல்லை.
கும்பல் கும்பலாக கடைதெருவுக்கு சென்று மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி வாங்க முண்டியடிப்பதும், தடையைமீறி செயல்பட்ட சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு சென்றதே சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணமாக உள்லது. சென்னை நகர வாசிகள் ஊரடங்கை மதித்து, விழிப்புடன் இல்லாவிட்டால் கொரோனாவின் ஆபத்து நீங்கப் போவதில்லை.