தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா விழிப்புணர்வு இல்லாமலும், ஊரடங்கை பின்பற்றாமல் சுற்றி வருவதும் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 121 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 108 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 7 குழந்தைகள் உட்பட 96 பேரும், செங்கல்பட்டில் 3 குழந்தைகள் மற்றும் 9 பேரும், காஞ்சிபுரத்தில் ஒருவரும், கள்ளக்குறிச்சியில் 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.