வெப்சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கும் ஏஆர் முருகதாஸ்: நாயகி யார் தெரியுமா

புதன், 29 ஏப்ரல் 2020 (07:24 IST)
கோலிவுட்டின் பல பிரபலங்கள் வெப்சீரிஸ் பக்கம் சென்று உள்ளார்கள் என்பது தெரிந்ததே. ஏற்கனவே பிரகாஷ்ராஜ், சமந்தா, காஜல் அகர்வால், பரத் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் பலர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளார். 
 
இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பில் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் இந்த வெப்சீரிஸ்ஸை அவரது உதவி இயக்குனர் ஒருவர் இயக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் அசோக்செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை வாணி போஜன் இந்த வெப்சீரிஸில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த வெப்சீரிஸ் நாயகன் கேரக்டருக்கு முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த வெப்சீரிஸ் குடும்ப சென்டிமென்ட் கலந்த கதையம்சம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்