தீர்த்த பற்றாக்குறை... இன்று முதல் தடுப்பூசி மையங்கள் இயங்கு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (08:21 IST)
சென்னையில் இன்று வழக்கம் போல் கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலில் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் அடிக்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
 
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் அமைத்து போடப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்து தடுப்பூசிகள் போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று மாலை மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது. இதனையடுத்து சென்னையில் இன்று வழக்கம் போல் கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை மட்டும் தற்காலிகமாக நிறுத்தம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்