இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமையா? ஏற்று கொள்ள மறுக்கும் காங்கிரஸ்..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (13:47 IST)
தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு திமுக தான் தலைமை என்ற நிலையில் புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணிக்கு திமுக தான் தலைமை என திமுக எம்எல்ஏக்கள் கூறி வருவதை காங்கிரஸ் கட்சியினர்  கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
புதுச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் பிரதான கட்சியாக இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில்  தான் திமுக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய கட்சியான காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் திமுக ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
 
இந்த நிலையில்  புதுவையில் திமுகவுக்கு தான் அதிக செல்வாக்கு இருக்கிறதாக கூறி திமுக தலைமையில் தான் இந்தியா கூட்டணி அமைய வேண்டும் என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்
 
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவை விமர்சனம் செய்து வருவதால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்