நடிகர் விஜய் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவருடைய கட்சியை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பேட்டி அளித்தபோது ஓட்டுக்கு காசு வாங்க கூடாது, ஊழலை எதிர்க்க வேண்டும் என்று கூறும் எந்த கட்சியையும் நாங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என்று கூறியுள்ளார்.