அரசு பஸ்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த பேருந்துகளில் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட அரசு பஸ்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட அமெலாண் இயக்குனர் கூறியுள்ளதாவது: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மொபைல் போனை பார்த்தபடி இருப்பதாகப் புகார் எழுந்தது எனவே, பகலில் இரு படிக்கட்டுகளும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் பணியாற்ற வேண்டும்.
இரவு நேரத்தின்போது, டிரைவருக்கு உதவியாக முன் இருக்கையில் அமர வேண்டும் என்றும் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.