பொதுமுடக்கம் - கட்டுப்பாடுகள் என்ன...? விரிவான தகவல்!!

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (16:57 IST)
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 
 
ஆம் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
 
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.
 
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
 
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
 
மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
 
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது, நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்.
 
நான்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்
 
நான்கு மாவட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாகத் தமிழக அரசு வழங்கும்.
 
நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம்
 
தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் இ பாஸ் வழங்கப்படும்.
 
திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் 
 
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், நோயாளிகளுக்கு உதவி செய்ய  அனுமதி
 
கொரோனா கட்டுப்பாடுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது. 104 மற்றும் 108 சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்