வடகிழக்கு பருவமழை டவுட்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (17:59 IST)
கடந்த ஆண்டு பெய்த மழையை தொடர்ந்து இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தேவையான அளவை விட அதிகமாகவே பெய்தது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அதிகமாகவே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
 
அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த உலக வானிலை மையம், அடுத்த மூன்று வாரங்களுக்கு குறைந்த அளவே மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
 
இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில்,
 
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட 60 சதவீதம் குறைவாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய பசபிக் கடலின் வெப்பநிலை சராசரியை விடகுறைவாக உள்ளது. 
 
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் தென்மேற்கு பகுதியில் இருந்து வேறு நாடுகளுக்கு நகர்ந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்