சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.101 உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (07:18 IST)
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றம் ஏற்படும் என்ற நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூபாய் 101 உயர்த்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நவம்பர் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. இன்றைய விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று மீண்டும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50 என்ற விலையில் தொடர்ந்து விற்பனையாகிறது
 
இருப்பினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதத்தில் 300 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்