விஜயை சீண்டிய வானதி சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (08:46 IST)
பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சரியான திட்டமிடலுடன், பொதுமக்களுக்கு சிரமமில்லாமல் இதனை செய்திருக்கலாம் என பலரும் கூறுகின்றனர்.


 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல நடிகர் விஜய், இந்த திட்டத்தை வரவேற்றார் ஆனால் அதே நேரத்தில் ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களின் சிரமங்களை கூறினார். மேலும் 20 சதவீதம் பேரில் ஒரு சிறிய குரூப் மக்கள் செய்யும் தவறுக்கு 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
இதனையடுத்து இதற்கு பதலளிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறுகையில், பெயர்த்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார். அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல முன்பும் இறந்து போயிருக்கிறார்கள்.
 
ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து ஏழை எளிய மக்களின்  கண்ணீர் துடைக்க உதவுங்கள் என கடுமையாக சாடினார்.
 
இந்நிலையில் வானதி சீனிவாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நடிகர் கருத்து தான் சொல்லுவார் விஜய் என்ன கட்சியா நடத்துறாரு? நீங்க தான மக்கள் பிரதிநிதி? நீங்க தான ஓட்டு கேட்டு வரிங்க? என சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
 
இதற்காக தனியாக ஒரு ஹெஷ் டெக்கையே உருவாக்கி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்