வீடுதேடி வரும் பாடநூல்கள் - தமிழக அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2016 (14:40 IST)
இணையதளம் மூலம் பதிவு செய்தால், பாடநூல்கள் வீடுதேடி வரும் வகையில் புதிய வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
2016–17–ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன.
 
மாணவர்களும் தேவைப்படும் 2016–2017 ஆம் கல்வியாண்டிற்கு, முதல் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால், நாம் பதிவு செய்த பாடநூல்கள் கூரியர் மூலம் நோமது வீடு தேடி வரும்.
 
மேலும், தமிழகத்தில் உள்ள தாலுக்கா அலுவலகங்களில் உள்ள 269 இ–சேவை மையங்களிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
 
தமிழக அரசின் இந்த புதிய முற்சிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்