திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்த விமல் (23), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ் (24).
ஆகாஷ், விமல், சதீஷ் ஆகியோர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், திடீரென ஆகாஷ் உள்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து வெட்டுக்காயங்களுடன் தப்பி ஓடினார்கள்.