ஆகியோருடன் வசித்து வந்தார். சஜிதா எம்.கைகாட்டி பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ்ஜில் பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிபழக்கம் மற்றும் தவறான சகவாசம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சஜிதா, கோத்தகிரி காவல்நிலையத்தில் தனது குழந்தை ஹர்சினி காணவில்லை என்று புகார் அளித்தார் . காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் போலீசார் குழந்தை ஹர்சினியை தேடினர். இந்நிலையில் சஜிதா பணிபுரியும் காட்டேஜில் உள்ள நீர் தொட்டியில் ஹர்சினி பிணமாக கிடந்தார். ஹர்சினி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இரவு காட்டேஜ் கண்காணிப்பு
கேமிராக்கள் அனைத்தும் ஆப் செய்யபட்டிருந்ததால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சஜிதாவை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், சஜிதா தனது குழந்தை ஹர்சினியை கவனிக்க முடியாமல் இருந்துள்ளார் . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது அருந்திய சஜிதா, தனது மகள் ஹர்சினியை காட்டேஜ் நீர் தொட்டியில் துாக்கி விசி உள்ளார். மேலும் காலையில் தனது குழந்தையே காணவில்லை என அனைவரையும் நம்ப செய்து உள்ளார். இந்த தகவல் விசாரணையின் தெரியவந்துள்ளது.