எய்ட்ஸ் மாப்பிள்ளை; திருமணத்தை நிறுத்திய மாவட்ட கலெக்டர்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:17 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மறைத்து திருமணம் செய்துகொள்ள முயன்றபோது, அந்த திருமணத்தை மாவட்ட பொறுப்பு கலெக்டர் தடுத்து நிறுத்தினார்.


 

 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், திருவண்ணாமலை பொறுப்பு கலெக்டர் பழனிக்கு, திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை ஆய்வு செய்து பார்த்தார்.
 
அதில் அந்த மணமகனின் பெயர் இருந்தது. இதையடுத்து உடனடியாக திருமண மண்டபத்திற்கு ஆர்டிஒ, டிஸ்பி, தாசில்தால், அரசு மருத்துவர் ஆகியோர் விரைந்து சென்றுள்ளனர்.
 
அங்கு மணப்பெண் மற்றும் அவரது தாயாரிடம் மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது, எனவே நன்றாக யோசித்து முடிவெடுங்கள், என்று கூறியுள்ளனர்.
 
இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உண்மையை மறைத்து திருமணம் செய்ய நினைத்தது மிகப் பெரிய குற்றச்செயல்.   
அடுத்த கட்டுரையில்