சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மா நகரில் தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்க்யூட் பிரேக்கர் வெடித்துள்ளது. இதனால் மின் இணைப்பு தடை பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் ஆகியும் சரிசெய்யபப்ட்டு மின்சாரம் வழங்கப்படாததால், திருமண வீட்டார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்தில் மணமகளின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்த மணமகள் மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.