மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா கும்ப்ளே!

சனி, 18 செப்டம்பர் 2021 (11:05 IST)
இந்திய தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அவர் பதவி விலகியதும் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த கும்ப்ளே  அல்லது லஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2016-2017 ஆம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே இருந்தார். ஆனால் அவருக்கும் கேப்டன் கோலிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பதவி விலகினார்.

இதனால் அவர் மீண்டும் நியமிக்கப்படுவாரா அல்லது லஷ்மன் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்