புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து: வெறிச்சோடிய தேவாலயங்கள்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (11:42 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 வரை அமலில் உள்ள இந்த உத்தரவால் நாடு முழுவதிலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இன்று கிறிஸ்தவ மக்களின் புனித பண்டிகையான புனித வெள்ளி நாளாகும். இந்த நாளில் திரளான மக்கள் தேவாலயங்களில் கூடி பிரார்த்தனை செய்வது வழக்கம். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தேவாலயங்கள் ஆள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு புனித வெள்ளியையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை புரிவார்கள். தற்போது அங்கும் ஜன நடமாட்டமின்றி அமைதியான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்