கடைகளை அடைக்க தலைமைச் செயலர் புதிய உத்தரவு !

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (22:42 IST)
இந்தியாவில், சாதாரண மக்கள் முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றின் தீவிரம் கருதி மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோவது அதிகரித்துவருகிறது. அதேசமயம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் 15,830 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இன்று தமிழகத் தலைமைச் செயலாளர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகலை மூட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பை மீறி எதேனும் கடைகளை வியாபாரிகள் திறந்திருந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்