வேட்டை தொடர்கிறது..சென்னை புழல் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி, துப்பாக்கி முனையில் கைது

Mahendran
புதன், 17 ஜூலை 2024 (20:17 IST)
தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ரவுடிகளை ஒடுக்க முடிவு செய்தது. 
 
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் ரௌடிகள் கணக்கெடுக்கப்பட்டதாகவும் சில ரவுடிகளின் வீட்டுக்கே சென்று எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. 
 
சமீபத்தில் கூட சில ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது குழல் பகுதியில் ஏ ப்ளஸ் பட்டியலில் இருந்த ரவுடி ஒருவர் பதுங்கி இருந்ததாக வெளியான தகவலை அடுத்து அவரை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சென்னை புழல் பகுதியில் 30 வயது சேது என்ற ரவுடி ஏ ப்ளஸ் பட்டியலில் இருந்த நிலையில் அவர் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் இருந்த ஏ பட்டியல் ரவுடி பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டார் . 
 
ரவுடி சேது மீது 30-க்கும் மேற்பட்ட வழக்கூகள்  இருக்கும் நிலையில் அவர் புழல் பகுதியில் தகவல் பதுங்கி இருந்த ரகசிய தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்