சிறந்த கல்லூரிகள் பட்டியல்: சென்னை மாநிலக் கல்லூரிக்கு 3வது இடம்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:48 IST)
சிறந்த கல்லூரிகள் பட்டியல்: சென்னை மாநிலக் கல்லூரிக்கு 3வது இடம்!
இந்திய அளவில் சிறந்த கல்லூரிகள் பட்டியல் எடுக்கப்பட்ட நிலையில் அதில் மூன்றாவது இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
அதில் சென்னை லயோலா கல்லூரி, கோவை பிஎஸ்ஜி மகளிர் கல்லூரி ஆகியவைகளை முந்தி மாநில கல்லூரி மூன்றாவது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது 
 
சென்னை லயோலா கல்லூரி 4வது இடத்திலும் கோவை கோவை பிஎஸ்ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்த சென்னை மாநிலக் கல்லூரிக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்