சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த இசை கலைஞர் தேவானந்த் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் திடீரென கடத்தப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடித்துவிட்டு அவர் திருவேற்காடில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது திடீரென அவரது கார் மறிக்கப்பட்டு அவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.