சென்னை ஐஐடியில் ஆன்லைன் பட்டப்படிப்பு அட்மிசன்!! – விண்ணப்பிப்பது எப்படி?

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (08:37 IST)
சென்னை தகவல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் (Chennai IIT) 4 ஆண்டு கால ஆன்லைன் பட்டப்படிப்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பது பெரும்பான்மையான மாணவர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக புதிய ஆன்லைன் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியின் பி.எஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேசன் (Data Science and Application) என்ற 4 ஆண்டு பட்டப்படிப்பு ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பட்டப்படிப்பில் சேர 12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு படித்த மாணவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்த எந்தவொரு மாணவரும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பாடம் என்பதால் வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பட்டப்படிப்பில் இணைவோருக்கு வகுப்புகள் ஆன்லைனில் நடந்தாலும் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் ஆகஸ்டு 19ம் தேதிக்குள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்