பிரியாணியில் கரப்பான்பூச்சி; மூடப்பட்ட உணவகம்! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (12:08 IST)
பிரியாணியில் கரப்பான்பூச்சி இருந்த புகாரில் பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்த ஒருவர் அதில் கரப்பான்பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து வாடிக்கையாளர் அளித்த புகாரின்பேரில் அடுத்த 3 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்