செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (17:43 IST)
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சற்று முன் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது. 
 
மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்