இதன்பின்னர் சரத்குமார் என்பவரை கடந்த சில மாதங்களாக கீர்த்தனா காதலித்து வந்தார். இந்த நிலையில் கீர்த்தனா சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் காதலன் கோபி கேலி செய்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா, கோபியை கொல்ல சரத்குமாரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
காதலிக்காக கொலையும் செய்ய துணிந்த சரத்குமார் தனது நண்பர்களுடன் கத்தி,வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோபியை தாக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். தன்னை கொலை செய்ய சரத்குமார் வருவது தெரிந்தவுடன் உயிரை காப்பாற்றி கொள்ள கோபி ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய சரத்குமார் கோஷ்டியினர், கோபி மீது வெடிகுண்டை வீசியுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததால் கோபி உயிர் தப்பினார். ஆனால் காவல்துறையினர் கொலைசெய்ய முயன்ற சரத்குமாரையும், தூண்டிவிட்ட கீர்த்தனாவையும் கைது செய்யாமல் கோபியை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.