விநாடிக்கு 1,000 கன அடி நீர்: நண்பகலில் திறக்கப்படும் செம்பரம்பாக்கம்!!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:30 IST)
எதிர்ப்பார்த்தப்படியே, இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியாகும்.  
 
இதனிடையே தற்போது நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.  
 
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். ஏற்கனவே மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் 24 அடியில் 22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
இதனிடையே எதிர்ப்பார்த்தப்படியே, இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்