இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.
மேலும் தேர்வு எழுதுபவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், மத்திய ஆயுதப் படைகளில் அதிக பங்களிப்பை உறுதி செய்யவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.