ராகுல் காந்தியின் ஆசிரியர் இதை சொல்லி கொடுக்கவில்லையா? அமைச்சர் அமித்ஷா கேள்வி..!

Siva

ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:25 IST)
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசியபோது, ‘பிரதமர் மோடி ஓபிசி குடும்பத்தில் பிறக்கவில்லை, மாறாக, அவர் 'மோத் காஞ்சி' சமூகத்தில் பிறந்தார், இது குஜராத்தில் உள்ள பாஜக அரசாங்கம் 2000 ஆம் ஆண்டில் OBC பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஒரு பொதுச் சாதியாகக் கருதப்பட்டது . 
 
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் மோத் காஞ்சி சாதியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே பிரதமர் பொதுச் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓபிசி என்பது ஒரு பிரிவு, அது ஜாதி அல்ல என்று தெரிவித்துள்ளார். திரும்பத் திரும்ப பொய் சொல்வது தான் ராகுல் காந்தியின் கொள்கை என்றும் ஓபிசிக்கும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம் கூட அவருக்கு தெரியவில்லை என்றும் பிரதமர் ஓ பி சி என்று தான் கூறினார் என்பது ஒரு பிரிவு அது ஜாதி அல்ல, ராகுல் காந்தியின் ஆசிரியர் இதை அவருக்கு சொல்லிக் கொடுக்கவில்லை என நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்