மாயனூர் கதவணையை வந்தடைந்த காவிரி நீர்..! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

Senthil Velan

திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:22 IST)
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காகவும், விநாடிக்கு 6600 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து நேற்று இரவு முதல் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. 
 
இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 5042 கன அடி தண்ணீருக்கு வந்து கொண்டுள்ளது. அந்த தண்ணீர் முழுவதுமாக அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.  

காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை சென்ற பிறகு மாயனூர் கிளை வாய்க்கால்களில் திறக்கப்படும்.
 
கரூர் மாவட்டத்தில் சுமார் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு ஆகிய பயிர்கள் கிளை வாய்க்கால் தண்ணீர் திறப்பு மூலம் பாசனம் பெறும். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்