மெரினாவில் நள்ளிரவில் விபத்து: போதையில் கல்லூரி மாணவர்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (04:18 IST)
சென்னை மெரீனாவில் நள்ளிரவில் நடந்த விபத்து ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் வந்த கல்லூரி மாணவர்கள் உழைப்பாளர் சிலை அருகேயுள்ள சிக்னல் கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



 

 
கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஈசிஆரில் இருந்து வோக்ஸ்வேகன் போலோ காரில் நள்ளிரவில் மெரீனா சாலையில் மிக வேகமாக வந்துள்ளனர். அப்போது கார் உழைப்பாளர் சிலை அருகே இடதுபுறம் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சிக்னல்மீது மோதியது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு இளைஞர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்து இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் சென்ற காரும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்