ஈரோடு மாவட்டம் செல்லிமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர், இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சிந்து அக்கா முறை. இந்நிலையில், சிந்துவின் கணவர் குடும்ப செலவுக்காக தனசேகரிடம் பணம் கேட்டு உள்ளார்.
பணத்தை பெருவதற்கு சிந்து, தனசேகர் கூறிய இடத்திற்கு சென்று உள்ளார். அதன் பின்னர் சிந்துவின் கணவரை சந்தித்து அக்காவிடம் பணம் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டேன் என கூறியுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் சிந்து வீட்டிற்கு வராததால், சந்தேகம் அடைந்து சிந்துவின் கணவர் தனசேகரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது தனசேகர் குடிபோதையில் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரனையில், சிந்துவை அழைத்துக்கொண்டு பணம் வாங்க சென்ற போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க திருட முடிவுசெய்தேன்.
இதனால், அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றேன். ஆனால், சிந்து தகறாறு செய்ததால் கல்லை எடுத்து மண்டையில் அடித்தேன். அப்படியும் உயிர் போகாததால் அவர் புடை முந்தானையில் கழுத்தை நெருக்கி கொன்றேன் என கூறியுள்ளார்.