ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்த இளம் பெண் ஷீலா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரும், திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியில் வசிக்கும் கவின்குமார் என்கிற வாலிபரும் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். ஆனால், நேரம் வரும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளலாம் எனக்கருதிய அவர்கள் அலைபாயுதே பட பாணியில் அவரவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் அவ்வப்போது இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்ததில் 3 முறை ஷீலா கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதற்காக கருக்கலைப்பு செய்துள்ளார்.
ஆனால், இவர்களின் காதல் விவகாரம் எப்படியோ கவினின் பெற்றோருக்கு தெரியவர கீழ்ஜாதியை சேர்ந்த ஷீலாவை தங்கள் மருமகளாக ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கவினையும் எச்சரிக்கை செய்து வந்தனர். எனவே, நாளடைவில் கவினும் ஷீலாவிடம் தொடர்பு கொள்ளாமல் விலகியே இருந்தார்.
இது ஷீலாவிற்கு அதிர்ச்சியை கொடுக்க தனது குடும்பத்தினர் மற்றும் ஊரின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து சென்று ஈரோடு எஸ்.பி சக்தி கணேஷிடம் சென்று நடந்தவற்றை கூறி முறையிட்டு, தனது காதல் கணவனோடு சேர்த்து வைக்குமாறு கதறியுள்ளார். இதுகுறித்து புகார் மனுவையும் அளித்துள்ளார்.
இதில் சோகம் என்னவெனில், தற்போது ஷீலாவை யாரென்றே தெரியாது என கவின் கூறுகிறார். காதலனை ரகசியம் திருமணம் செய்து 3 முறை கருப்பலைப்பும் செய்த பின், பெற்றோரின் மிரட்டலால் தன்னை யாரென்றே தெரியாது எனக்கூறும் கவினின் கரத்தை பிடிக்க ஷீலா சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.