தங்கையை உல்லாசத்துக்கு அழைத்த அண்ணன்: ஆபாச படம் பார்த்தபோது தட்டிக்கேட்டதால் கொலை

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (12:53 IST)
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அண்ணன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (16) என்பவர் வாழை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் தான் தான் கொலை செய்ததாகக் கூறி ஊராட்சி கவுன்சிலரிடம் சரணடைந்தார். சரணடைந்த தினேஷ் குமார் கோலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீக்கு அண்ணன் முறையாகும்.
 
காவல்துறையின் விசாரணையில் தினேஷ் குமார் கூறியபோது, கடந்த 22-ஆம் தேதி வாழை தோட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியில் சென்ற ஜெயஸ்ரீ என்னை கண்டதும், இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் அவரை கண்டித்ததோடு, அவரை உல்லாசத்திற்கு அழைத்தேன்.
 
உடனே அவர் ஆபாச படம் பார்த்ததே தவறு, அதோடு என்னை அழைப்பது இன்னும் அசிங்கமானது. இதை கட்டாயம் உன் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் எங்கே வீட்டில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன், என்று கூறினார். காவல் துறையினர் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்