கலைஞர் 100 நிகழ்ச்சியை எம்ஜிஆர் நினைவு தினத்தில் வைத்தது ஏன்? புளூசட்டை மாறன்..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (18:18 IST)
கலைஞர் 100 என்ற பிரமாண்டமான திரையுலக நிகழ்ச்சி எம்ஜிஆர் நினைவு தினமான டிசம்பர் 24ல் வைத்தது ஏன்? என புளூசட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி.. தமிழ் திரையுலகம் சார்பாக டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது.
 
டிசம்பர் 24..முன்னாள் முதல்வரும், நடிகர் சங்கம் உருவாக முக்கியமானவர்களில் ஒருவராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் நினைவு நாள்.
 
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வீட்டு வாசல் மற்றும் தெருமுனைகளில் வைத்தும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பாடல்களை ஒலிபரப்பியும் மரியாதை செய்கிறார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்.
 
எத்தனையோ நாட்கள் இருக்கும்போது.. இந்த நாளை தேர்வு செய்து (கலை)நிகழ்ச்சி நடத்துவது ஏன்?
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்