அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்

திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:27 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பாக தனது கருத்துக்களை திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம் எழுதியுள்ளது. 
 
சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக பாஜக கூறி வருகிறது. இந்த நிலையில்  முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம் எழுதி உள்ளது. 
 
அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: சனாதானம் தொடர்பான தன் கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால், இதற்கு பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம்;’ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்